தாத்தா,பாட்டியை பார்க்கும் ஆர்வத்தில் 50கிலோ மீட்டர் வழிதவறி சென்ற சிறுவன்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தாத்தா, பாட்டியை பார்க்கும் ஆர்வத்தில் 50 கிலோ மீட்டர் தூரம் வழிதவறி இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவனை காவல் துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த 11 வயது சிறுவன் வெற்றிசெல்வன் சேத்தியாத்தோப்பு பகுதியில் இருக்கும் தாத்தா, பாட்டி வீட்டிற்கு செல்லும் ஆர்வத்தில் தந்தையின் டிவிஎஸ் எக்ஸ்எல் இரு சக்கர வாகனத்தில் அவருக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
ஆனால் வழிதவறி அந்த சிறுவன் சீர்காழிக்கு சென்ற நிலையில் வாகனத்தில் இருந்த பெட்ரோல் தீர்ந்து விட்டது. இதன் காரணமாக அழுதபடி நின்ற அவனை அவ்வழியாக வந்த ரோந்து போலீசார் விசாரித்து பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.






