--- --:--:-- --

வங்கக் கடலில் இன்று உருவாகிறது புயல்!

2.1

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஒடிசாவில் இருந்து தெற்கே 1,100 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்க கடல் ஓரத்தில் இருந்து தெற்கே 1,250 கிலோ மீட்டர் தொலைவிலும், வங்கதேசத்தில் இருந்து தெற்கு தென்மேற்கே ஆயிரத்து 130 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

 

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக வலுப்பெற்று அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறக்கூடும்.

 

தொடக்கத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 17ம் தேதிக்கு பிறகு வடக்கு வடகிழக்காக திசை மாறி பதினெட்டாம் தேதி முதல் 20ம் தேதிகுட்பட்ட காலகட்டங்களில் மேற்கு வங்கக் கடலோரத்தை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இந்த புயல் சின்னம் காரணமாக அந்தமான், நிக்கோபர் தீவுகளில் இன்று பரவலாக மழையும், ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும். அடுத்தடுத்த நாட்களில் ஒடிசா, மேற்கு வங்க பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும்.

 

சூறைக் காற்று வீசக் கூடும் என்பதால் இன்றும், நாளையும் தென் வங்க கடல் பகுதிக்கும், நாளை மற்றும் நாளை மறுநாள் மத்திய வங்கக் கடல் பகுதிக்கும், வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் வடக்கு வங்க கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தை ஒட்டியுள்ள வடக்கு வங்க கடல் பகுதிகளுக்கு 18 முதல் 20-ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon