கொரோனா இல்லாத மாவட்டமாக மாறிய சேலம்..!
சேலம் அரசு மருத்துவமனையில் கொரொனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த கடைசி மூன்று பேரும் குணமடைந்து வீடு திரும்பியதன் மூலம் கொரொனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சேலம் உருவெடுத்துள்ளது.
மருத்துவமனையில் 35 கொரொனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். ஏற்கனவே 32 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இன்று சேலம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மேலும் மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பினார். எனவே இதன் மூலம் கொரொனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சேலம் உருவெடுத்துள்ளது.






