ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க கோரிக்கை!
அசாமில் 88 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்க கோரி மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. மாநில முதலமைச்சர் தௌகாத்தியில் சர்பானந்தா சோனாவால் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது மாநிலத்தில் கொரொனா தடுப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க கோரி உள்ளதாகவும் தெரிவித்தார். எனினும் மத்திய அரசுக்கு இது குறித்த ஒரு பார்வை இருக்கும் என்றும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என்று குறிப்பிட்டார்.
அசாமில் 87 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்தனர். 39 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.






