கோவை தடாகம் பகுதியில் 100 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு !!!
கோவை மாவட்டம் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போடப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்துள்ளது.இதனையடுத்து களத்தில் இறங்கிய காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான காவல் துறையினர் தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவை to ஆனைகட்டி செல்லும் சாலையில் தைலமர பஸ் ஸ்டாப் அருகிலுள்ள சக்தி செங்கல் காளவாய் பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் செங்கல் காளவாய் அருகே முள் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய பிளாஸ்டிக் டிரம்மில் சுமார் 100 லிட்டர் சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.இதுகுறித்து வழக்குபபதிவு செய்துள்ள தடாகம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து சாராய ஊறல்களை கண்டறிந்து அழிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






