சமூக இடைவெளி கடைப்பிடிக்க தவறும் சூரன்கோட்டை ராம்கோ நியாய விலை கடை!
இராமநாதபுரம் சூரன்கோட்டை ஊராட்சி சூரன்கோட்டை காலனி பகுதியில் உள்ள AB 048 P1 என்ற ராம்கோ நியாய விலை கடையில் கூட்டம் அலைமோதியது.மேலும் தற்போது கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
ஆனால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ரேஷன் கடை முன்பு கூட்டமாக நின்று பொருட்களை வாங்கிச்சென்றனர். இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் ரேஷன் கடை பணியாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதனை ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இப்பகுதி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






