நியாய விலைக் கடையில் கூடுதல் கையிருப்பு இருந்ததால் விற்பனையாளர் தற்காலிக பணி இடைநீக்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் அதிரடி உத்தரவு!
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 775 நியாயவிலைக் கடைகள் மூலம் 3 இலட்சத்து 66 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பாக நியாயவிலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது . அந்த வகையில் இன்று கமுதி வட்டம் அபிராமம் கிராமத்தில் உள்ள நியாய விலை கடை எண்: 1-ல் மாவட்ட ஆட்சித் தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது இருப்பில் வராமல் அரிசி (Excess stock ) கூடுதல் கையிருப்பு இருந்ததால் சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளர் சந்திரசேகர் என்பவரை உடனடியாக தற்காலிக பணி இடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இராமநாதபுரம், அரண்மனை பகுதியிலுள்ள நியாயவிலைக் கடை எண் :1 மற்றும் 2 ஆகிய கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது, இருப்பிலுள்ள அரிசி அளவில் 61 கிலோ குறைவாக இருப்பதை கண்டறியப்பட்ட தன் காரணமாக சம்பந்தப்பட்ட விற்பனையாளருக்கு ரூ .1,525 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று, நியாயவிலைக்கடைகளில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.






