ஊரடங்கு காரணமாக 50 நாட்களுக்கும் மேல் பெண்கள் அழகு நிலையங்கள் மூடப்பட்டதால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதால், உரிய கட்டுப்பாடுகளுடன் அழகுநிலையங்களை திறக்க அனுமதி வேண்டி அமைச்சர் மற்றும் ஆட்சியரிடம் மனு.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்கள், கடைகள் முழுமையாக மூடப்பட்டது. இந்த நிலையில் தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டு தனிகடைகள் திறக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் 1500 அழகு நிலையங்கள் இருப்பதாகவும், அவைகளை நம்பி சுமார் 1000 குடும்பங்கள் உள்ள நிலையில் ஊரடங்கு காரணமாக ஐம்பது நாட்களுக்கும் மேலாக அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு உரிய நிவாரண வேண்டியும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்த கடனுதவி அழகு நிலையங்களுக்கும் வழங்க வேண்டி தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமாரை சந்தித்து தமிழக பெண் அழகு கலை நிபுணர் சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது. மேலும் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து உரிய கட்டுப்பாடுகளுடன் அழகு நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கும் வழியில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.