--- --:--:-- --

கோவையில் கொரோனா தாக்கம் இருந்த 26 கட்டுப்பாட்டு பகுதிகளில் 23 பகுதிகள் விடுவிக்கபட்டுள்ள நிலையில் மீதமுள்ள 3 பகுதிகள் இன்னும் 3 நாட்களில் விடுவிக்கப்படும் – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு !!!

8

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்திற்ககு பிறகு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,கொரோனா தடுப்பில் சென்னைக்கு அடுத்த படியாக கோவை இருந்தது.

 

முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் எடுத்த போர்க்கால நடவடிக்கையின் பேரில் தொற்று இல்லா மாவட்டமாக கோவை மாறியுள்ளது.இதற்கு உழைத்த அனைத்து பணியாளர்களுக்கும் ,
ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்தார்.கோவை பச்சை மண்டலமாக மாறியுள்ள நிலையில் அதற்கு வழிகாட்டிய முதல்வருக்கு கோவை மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் பேசினார்.

 

மேலும்,தற்போது கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டுமே கொரோனவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கோவையில் இதுவரை 16.5 கோடி ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு கிடைத்துள்ளது.நிதி கொடுத்த அனைவருக்கும் நன்றி எனவும்,தமிழக அரசு வழிகாட்டுதலின் படி மாஸ்க் அணிந்தும்,சமூக விலகலை முறைப்படி கடைபிடிக்க வேண்டும் எனவும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

 

மேலும், கோவையில் கொரோனா தாக்கம் இருந்த 26 கட்டுப்பாட்டு பகுதிகளில் 23 பகுதிகள் விடுவிக்கபட்ட நிலையில் மீதமுள்ள 3 பகுதிகள் இன்னும் 3 நாட்களில் விடுவிக்கப்படும் எனவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon