--- --:--:-- --

காதலனுக்காக தனது தாயை எரித்துக் கொன்று நாடகமாடிய 16 வயது சிறுமி!

8.1

பெரம்பலூர் மாவட்டம் குன்னவட்டம் கீழ குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள், மனைவி பேச்சியம்மாள். இவர்களது ஒரே மகன் பழனிவேல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் உயிர் இழந்ததால் பெருமாள், பச்சையம்மாள் தம்பதியினர் ஒரு வயது பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் முதியவர் பெருமாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

 

இந்நிலையில் பள்ளிக்கு சென்று வந்த 16 வயது வளர்ப்பு மகள் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் ஆறு மாதங்களுக்கு முன்னர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதால் அந்த சிறுமி படிப்பை பாதியிலேயே கைவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சட்டவிரோத வில்லங்க காதல் திருமணத்தை மூதாட்டி கடுமையாக கண்டித்துள்ளார்.

 

காதல் கணவனை பிரிந்து இருப்பது போல நடித்து அந்த சிறுமி பச்சையம்மாள் கண்ணயர்ந்து தூங்கியதும் செல்போன் மூலம் காதலனை வரவழைத்து மொட்டை மாடியில் சந்தித்து வந்துள்ளார். அண்மையில் ஒரு நாள் இருவரும் மாடியில் ஒன்றாக இருப்பதை பார்த்த பச்சைமால் இருவரையும் பிடித்து கண்டித்ததோடு காதலனையும் மிரட்டியுள்ளார்.

 

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பச்சையம்மாள் சடலமாக கிடந்தார். கேஸ் கசிந்து தீப்பிடித்து வளர்ப்புத்தாய் பலியானதாக ஊர் மக்களிடம் தெரிவித்தார் சிறுமி காதலனுடன் தலைமறைவான தாக கூறப்படுகிறது. இதையடுத்து மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் தலைமறைவான காதல் ஜோடியை தேடி வந்தனர்.

கடலூர் மாவட்டம் தொழுது ஊரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் காதலியுடன் தங்கியிருந்த சிறுமியையும், காதலனையும் பிடித்து விசாரித்தபோது பச்சைமால் மரணம் குறித்து திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. சம்பவத்தன்று மணிகண்டன் குடி போதையில் காதலியை சந்திக்கச் சென்றுள்ளார். தன்னை வீட்டிற்குள் விட மறுத்து பச்சையம்மாள் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அவரை எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளார்.

 

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் நெற்றிப்பொட்டில் அடிபட்டு மயங்கி விழுந்துள்ளார். பின்னர் காதலியுடன் சேர்ந்து வீட்டிற்கு வெளியே இருந்த கல்லை தூக்கி வந்து பச்சையம்மாளின் தலையில் போட்டு நசுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதனை தீ விபத்தாக மாற்ற எண்ணி அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி அடுப்பில் தீ பற்ற வைத்தது தெரியவந்தது.

 

விடிந்ததும் எரி வாயு கசிவால் ஏற்பட்ட விபத்தில் பச்சையம்மாள் இறந்துவிட்டதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் நாடகமாடி விட்டு காதல் ஜோடி தப்பி சென்றது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் மணிகண்டன் மற்றும் சிறுமியையும் கைது செய்த போலீசார் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

திருமண வயதை எட்டாத 16 வயது சிறுமி ஒருவர் படிக்கின்ற வயதில் காதலில் விழுந்தால் வளர்ப்பு தாயை கொன்றதாக வழக்கில் சிக்கி சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon