57 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய 9 வயது சிறுமி!

புதுச்சேரியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி கொடுத்த 9 வயது சிறுமியை ஆட்சியர் தனது இருக்கையில் அமரவைத்து பாராட்டினார். தேங்காய்த்திட்டு பகுதியை சேர்ந்த வெள்ளையன், வித்யா தம்பதியினரின் மகள் அனுஷ்யா.

 

மடிக்கணினி வாங்க வேண்டும் என்ற ஆசையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்துள்ளார். இந்த நிலையில் ஊரடங்கால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் மூலம் அறிந்து கொண்டதன் மூலம் 58 குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உள்ளார்.


Leave a Reply