--- --:--:-- --

கொரோனா கசாயத்துடன் வரவேற்கும் இனிப்பகம் !

5

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூருக்கு அடுத்த படியாக அதிக கொரொனா நோயாளிகளை கொண்ட கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சிதம்பரத்தில் தான் தங்கள் வியாபாரத்துடன் வாடிக்கையாளர்களை அக்கறையுடன் கவனித்து வருகிறார்கள்.

 

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் முக கவசத்துடன் கைகளை கழுவுவது சமூக விலகளை உணர்த்தும் விதமாக கடைக்குள் இருக்கையில் அமர வைக்கப் படுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் கொரொனா நோய் எதிர்ப்பு சக்திக்காக மூலிகை கசாயம் தயாரித்து வழங்கப்படுகிறது.

 

பின்னர் ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு பணியாளர் என இடைவெளியுடன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. முன்னதாக பணிக்கு வந்த பணியாளர் அனைவருக்கும் ஜலதோஷம் நெருங்காமல் இருக்க மூலிகை வேது பிடிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

வியாபாரத்தைப் போலவே வாடிக்கையாளர் நலமும் முக்கியம் என்பதால் கொரொனா தொற்று பரவலை தடுக்க தங்களால் இயன்ற பணிகளை செய்து வருவதாக தெரிவித்தனர். இனி கொரொனாஎச்சரிக்கையுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டியதுதான் போல என்பதே இங்கு வரும் வாடிக்கையாளர்களை எண்ண ஓட்டமாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon