இனி மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றாலும் 14 நாட்கள் தனிமை தான்!
கொரொனா சோதனை செய்யவும் தனிமைப்படுத்துவதற்குமான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை செய்யப்படும்.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவருமே 14 நாட்கள் தனிமைபடுத்தப்படுவார்கள். பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரொனா சோதனை செய்யப்படும். கொரொனா இருப்பது உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். இல்லை எனில் பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
வெளி நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கொரொனா இருந்தால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். கொரொனா இல்லை என்றால் ஏழு நாட்கள் விடுதியில் கண்காணிப்பில் வைக்கப்படுவர். அதன்பின் 14 நாட்கள் வீட்டு தனிமையில் வைக்கப்படுவர்.
வெளிநாடுகள், வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வரக் கூடியவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு செல்பவர்கள் கர்ப்பிணி பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு வருபவர்கள் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.






