--- --:--:-- --

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த சேகர் என்ற முதியவர் கைது!

20

ஊரடங்கு உத்தரவு காரணமாக மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் போதைக்கு அடிமையான நபர்கள் பலர் அதிலிருந்து மீளத்தொடங்கி விட்டனர்.ஆனால் இன்னும் சிலர் மீளமுடியாமலும் இருப்பதால் தவறான பழக்கத்தை கையாண்டு வருகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை.

 

இந்நிலையில்சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செக்கடி கேட் அருகே காவல் உதவியாளர் தவமுனி ரோந்து சென்ற போது அங்கு சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

 

மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சேகர் (62) என்பவர் மீது பிரிவு 8(c) r/w.20(b)(ii) (B) NDPS Act -ன்படி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து 1.100 கிராம் கஞ்சா, மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon