திருவாடானையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆசிரியர்கள் !
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அரசு ஆண்கள்மேல்நிலைப் பள்ளி உள்ளது 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பெற்று வருகிறார்கள். தற்போது கொரனோ வைரஸ் பரவலை அடுத்து ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் உள்ள நிலையில் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனால் இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருவதால் ஆசிரியர்கள் மற்றும் நாட்டு நல பணித்திட்டம் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் சொந்த செலவில் ஒரு மாணவனின் குடும்பத்திற்கு அரிசி 5 கிலோ, சமையல் எண்ணெய், மளிகை பொருட்கள் உள்பட தொகுப்பு 188 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களே உதவியது வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வள்ளுவன் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டார்கள்.






