--- --:--:-- --

புறஊதாக் கதிர்களால் கிருமிகளைக் கொல்லும் எந்திரம் தயாரிப்பு!

11

ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன ஆய்வகத்தில் புற ஊதாக் கதிர்கள் மூலம் கிருமியை அழிக்கும் எந்திரத்தை தயாரித்துள்ளனர். கொரொனா வைரஸ் பரவலை தடுக்க காய்கறிகள், பழங்களை வெதுவெதுப்பான நீரில் கழுவுவதும் துணிகளை துவைத்து வெயிலில் காயவைப்பது ஆகிய நடைமுறைகளை மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

 

இதேபோல் செல்பேசி, மடிக்கணினி, பணத்தாள்கள், சீட்டுகள், காசோலை ஆகியவற்றில் உள்ள கிருமிகளை புறஊதாக்கதிர்கள் மூலம் அழிக்கும் இயந்திரத்தை ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன ஆய்வகம் தயாரித்துள்ளது.

 

ஆட்கள் அருகில் வருவதை உணர்ந்து தானாக திறக்கும். இதன் அறையில் பொருட்களை வைத்து விட்டால் புறஊதாக்கதிர்களை பாய்த்து கிருமிகளை அழித்துவிடும். பொருட்களை வெளியே எடுத்த பின் தானாக மூடிக்கொள்ளும் வகையில் இதனை உருவாக்கியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon