மதுபோதையில் டிரான்ஸ்பார்மரில் கைவைத்து இளைஞன்! உயிரிழக்கும் பதை பதைக்கும் காட்சி!
தெலுங்கானாவில் மதுபோதையில் டிரான்ஸ்பார்மரில் கை வைத்ததில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் துடி துடித்து உயிரிழந்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
ஜெகத்யாலா மாவட்டம் கோலட்லாவில் இளைஞன் ஒருவன் சாலையில் செல்வோர் மீது கற்களை வீசியும் பெரிய பெரிய கற்களை சாலையில் வைப்பது பின்னர் எடுப்பதுமாக இருந்தான். இதனை படம் பிடிப்பதில் ஆர்வம் காட்டிய பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக அந்த இளைஞனை தடுக்காத நிலையில் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் திடீரென கையை வைத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த இளைஞன் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுப்பாராயன் என்பதும் கட்டட பணி செய்து வந்தது தெரியவந்தது.






