--- --:--:-- --

ஆடு, கோழி, மீன் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை! கலெக்டர் உமாமகேஸ்வரி எச்சரிக்கை !

7.1

ஆடு, கோழி, மீன் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவற்றையும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் உமாமகேஸ்வரி எச்சரிக்கை

 

ஆடு, கோழி, மீன் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட எவற்றையும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

தற்பொழுது மாவட்டத்தில் ஆடு, கோழி இறைச்சிகள் மற்றும் சில அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை மிகுதியாக விற்பதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வரபெற்றுள்ளது.எனவே, மாவட்டத்தில் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட எவற்றையும் வணிகர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இதற்கென மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தொழிலாளர் நல அலுவலர், மாவட்ட காவல்துறை, நகராட்சி அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.மேலும் கடைகாரர்கள் தங்கள் கடைக்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வழங்குவதையும் கடையில் பணிபுரியும் பணியாளர்கள்; முககவசம், கையுறை அணிந்து பணிபுரிவதையும் உறுதி செய்ய வேண்டும்.

 

பொதுமக்கள் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வணிகர்கள் அதிக விலைக்கு விற்றால் உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் 9944959595 என்ற அலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon