போதையின் உச்சத்தில் உயிருடன் இருந்த பாம்பைக் கடித்துத் தின்ற இளைஞர்!
கர்நாடகாவில் போதை தலைக்கேறிய நிலையில் தனது வழியில் குறுக்கிட்ட பாம்பை கடித்து கொன்று தின்ற வீடியோ வைரலாகி வருகிறது . கோலார் மாவட்டம் மாத்தூர் பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில் மூக்கு முட்ட குடித்துள்ளார்.
பின்னர் இரு சக்கர வாகனத்தில் வரும் போது அவர் சென்ற பாதையின் குறுக்கே சாலை பாம்பு ஒன்று சென்றுள்ளது. இதனைக்கண்ட குமார் தான் போகும் வழியில் குறுக்கே பாம்பு சென்றதால் ஆத்திரம் அடைந்து அதனை பிடித்துள்ளார் பொதுமக்கள் முன்னிலையில் பாம்பை கடித்து தின்ற வீடியோ வைரலானதை தொடர்ந்து வனத்துறை வசம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.






