--- --:--:-- --

பூண்டி, நெசவாளர் காலனியில் பா.ஜ.க மாவட்ட தொழிற்சங்கம் சார்பில் 100 ஏழை,எளிய குடும்பங்களுக்கு ரூ 22 ஆயிரம் மதிப்பில் 5 கிலோ அரிசி

1

பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தொழிற்சங்கம் சார்பில் திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனி பகுதி மக்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. நெசவாளர் காலனியில் வசிப்பவர்கள் தறி மற்றும் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு போய் வந்தனர். இவர்களில் 100 ஏழை,எளிய குடும்பங்களுக்கு ரூ 22 ஆயிரம் மதிப்பில் 5 கிலோ அரிசியை பா.ஜ.க தொழிற்சங்க மாவட்ட பொது செயலாளர் தர்மராஜா தலைமையில் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தொழிற்சங்க துணைத்தலைவர் ராஜா, பூண்டி மண்டல தலைவர் சண்முகபாபு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon