5 சிங்கங்களுக்கும் ஒரு முதலைக்கும் நடந்த சண்டை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தென்னாப்பிரிக்காவில் 5 சிங்கங்களை எதிர்கொண்டு முதலை ஒன்று தப்பிச்சென்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தேசிய பூங்காவில் உள்ள இடத்தில் ஏராளமான சிங்கங்கள் வசித்து வருகின்றன. அங்கிருந்த ஆற்றின் கரையில் முதலை ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அதனை கண்டறிந்து சிங்கங்கள் அதனை சீண்டி தாக்கத் தொடங்கின. இதனால் கோபமுற்ற முதலை சிங்கம் ஒன்றினை தாக்கியது.

 

பின்னர் சிங்கங்கள் ஒன்று சேர்ந்து முதலையை தாக்க முயன்றன. இதனால் சற்றே தாமதித்து முதலை கண்ணிமைக்கும் நேரத்தில் தண்ணீருக்குள் மூழ்கி தப்பியது. இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.


Leave a Reply