--- --:--:-- --

திருவான்மியூரில் காய்கறி வியாபாரிக்கு கொரோனா!

11

சென்னை திருவான்மியூரில் காய்கறி அங்காடி ஒன்றில் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த அங்காடி அமைந்துள்ள வணிக வளாகம் மாநகராட்சி அதிகாரிகளால் மூடி முத்திரையிடப்பட்டுள்ளது. திருவான்மையூர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த காய்கறி அங்காடியில் வியாபாரி ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதையடுத்து அந்த வளாகத்தில் உள்ள மளிகை கடைகள், மலர் அங்காடி, மரச்சாமான்கள் என அனைத்தும் மூடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளது. வணிக வளாகத்தோடு தொடர்புடைய அனைவருக்கும் கொரொனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவைப் பொறுத்து வணிக வளாகம் மீண்டும் திறக்கப்படும் என்பது தெரியவரும்.

 

கொரொனா சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களையும் ஒதுக்கித் தருமாறு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக திருமண மண்டப உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கொரொனாவால் ஏற்பட்டுள்ள அவசர சூழலை கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

கொரொனா சிகிச்சைக்கான தேவை இருப்பதால் திருமண மண்டபங்களில் உடனடியாக உடைமைகளை காலி செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் ஒதுக்கித் தருமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டிருந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon