தொடர்ந்து உதவிகள் செய்வோம் தே.மு.தி.க.,வினர் நம்பிக்கை !
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே நிலைகுலைந்து நிற்கிறது. இந்த வைரஸை அழிக்க நேரடியாக மருந்துகள் இல்லாததால், சமூக விலகல் மட்டுமே தீர்வாக இருக்கிறது. அதனால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. இந்த ஊரடங்கால் அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், நாடோடிகள், பழங்குடி மக்கள் மிகப்பெரும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
அன்றாட உணவே அவர்களுக்குக் கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள திட்டங்கள் இந்த மக்களைப் பெரிய அளவில் சென்றுசேரவில்லை. இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் பல்வேறு இடங்களில் தங்களின் பணியை சிறப்பாக செய்துவருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆணையின்படி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உத்தரவு படி மாவட்ட கழக செயலாளர் திருவேங்கடம் அவர்கள் வழிகாட்டுதலின்படி திருப்புவனம் திருப்புவனம் நகர் கேப்டன் மன்ற செயலாளர் பாலகுரு தலைமையில் தொழிலாளர்களுக்கு நிவாரணம்பொருட்கள் நகர் செயலாளர் அலாவுதீன் பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகர் தொழிற் சங்க செயலாளர் கிடாவெட்டி கண்ணன் நகர் துணை செயலாளர் சங்கர் பொருளாளர் அபுல் .வாஹித் காளீஸ்வரன். பழனி .அப்தாஹீர். சபீர்அகமது.பாலகுரு.சாதிக்பாட்சா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தற்போது ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பொதுமக்களுக்கு சேவை செய்வோம் என தே.மு.தி.க.,வினர் தெரிவித்தனர்.







