மே 17 ஆம் தேதிக்கு பின்னர் ரயில் இயக்கப்படுமா?
நாடு தழுவிய ஊரடங்கு வருகிற 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதையடுத்து பயணிகள் ரயில் சேவைகள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. கொரொனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மார்ச் 24ஆம் தேதியன்று அழைத்து பயணிகள் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இரண்டாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மே 3ஆம் தேதி வரை ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 17ஆம் தேதி வரை ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் சரக்கு ரயில் நடவடிக்கைகள் தற்போது போலவே தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிப்போரை அழைத்து செல்ல திராமிக்ஷ்ஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
புலம்பெயர் தொழிலாளர்கள், யாத்திரிகர்கள், சுற்றுலாபயணிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சொந்த ஊருக்குத் திரும்ப விரும்பினால் மாநில அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு விண்ணப்பித்தவர்களை அழைத்து செல்லுமாறு மாநில அரசுகள் கூறும் பட்சத்தில் சிறப்பு ரயில்கள் மூலமாக அவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள் என்று ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மொத்தமாக இலவச டிக்கெட்டுகளை மாநில அரசுகளுக்கு ரயில்வே நிர்வாகம் அளிக்கிறது. 40 நாள் ஊரடங்கு காலத்தில் நேற்று முதல் ரயில் தெலுங்கானாவில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றது. 24 பெட்டிகளில் இடைவெளிவிட்டு அமர்த்தப்பட்ட 1,250 தொழிலாளர்களுடன் அந்த ரயிலை ரயில்வே அதிகாரிகள் பச்சைக்கொடி காட்டியும், கை தட்டியும் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மாலையிலும், இரவிலும் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இனி நாட்களில் இத்தகைய ஏராளமான சிறப்பு ரயில்களும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.







