--- --:--:-- --

தமிழகத்தின் பச்சை மண்டல பகுதிகளில் சில தளர்வுகள்!

2.1

தமிழகத்தில் பச்சை மண்டலத்தில் இடம்பெற்றுள்ள ஒரே மாவட்ட கிருஷ்ணகிரி ஆகும் . பச்சை மண்டலத்தில் 50% இருக்கைகள் குறைந்து பேருந்துகளை இயக்கலாம். அதாவது பணிமனைகளில் மொத்தமுள்ள பேருந்துகளில் 50 சதவீத எண்ணிக்கையில் இயக்கலாம். கார்கள், மோட்டார், சைக்கிளில் செல்ல ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.

 

பீடா கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனித்தனி கடைகள், குடியிருப்பை ஒட்டியுள்ள கடைகளைத் திறக்கலாம். தங்கியிருந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களை கொண்டு நகர்ப்புற பகுதிகளில் கட்டுமான பணிகளை துவக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரி, கடல் பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

அதேநேரம் தடை காலமாக இருந்தால் அனுமதி மறுக்கப்படும். பச்சை மண்டலத்தில் வரும் பகுதிகளில் மதுக் கடைகளைத் திறக்கலாம் என அறிவித்துள்ளது. இருப்பினும் அது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon