--- --:--:-- --

மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட பொது ஊரடங்கு!

1

கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் சில தளர்வுகளோடு மேலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை பொதுமக்கள் கூடும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது.

 

25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். கொரொனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் நாளையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் அதனை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சில தளர்வுகள் இடம்பெற்றுள்ளன. நாடு முழுவதும் சரக்கு வாகன போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

காலியாக இருந்தாலும் சரக்கு வாகனங்களை எந்த மாநில எல்லையிலும் நிறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள அனைத்து கடைகளையும் திறக்கவும் மற்றும் அத்தியாவசிய தொழில்களை மேற்கொள்ளும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் தொழிலாளர்கள் தங்கி மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகளைத் தொடங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

தனியார் நிறுவனங்கள் 33 சதவீத தொழிலாளர்களுடனும், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் மற்றும் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 100 நாள் வேலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யலாம். சுயதொழில்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

அதேசமயம் ரயில் ,விமானம், மெட்ரோ ரயில் சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது, அடுத்த 21 நாட்களுக்கு பள்ளி ,கல்லூரி உள்ளிட்ட எந்த கல்வி நிறுவனங்களும் இயங்க அனுமதி இல்லை. இது தவிர காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பொதுமக்கள் நடமாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமின்று இரவு 7 மணிக்கு மேல் யாரும் வெளியே நடமாட கூடாது.

 

65 வயதைக் கடந்தவர்கள், நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், பத்து வயதுக்கும் குறைவான சிறார்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசியல், பண்பாடு, விளையாட்டு, சமூக கூடல் ஆகியவற்றுக்கு மக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை நீடிக்கிறது.

 

தடை செய்யப்பட்ட பகுதிகளில் மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் பிரிவு இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், திரையரங்குகள், மால்கள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் திறக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon