மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு…! மத்திய அரசு அறிவிப்பு…!
Friends and relatives of Kushwaha family who work as migrant workers walk along a road to return to their villages, during a 21-day nationwide lockdown to limit the spreading of coronavirus, in New Delhi, India, March 26, 2020. To match Special Report HEALTH-CORONAVIRUS/INDIA-MIGRANTS. REUTERS/Danish Siddiqui
நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு அதாவது, மே 17ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 35,043 என்ற எண்ணிக்கையில் இருந்து,35,365 என்ற எண்ணிக்கைக்கு உயர்ந்து உள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பின்பற்றப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.
நாடு முழுவதும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு அதாவது, மே 17ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்படுகிறது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என மண்டலங்கள் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சிவப்பு மண்டலமாக உள்ள பகுதிகளில் இந்த ஊரடங்கில் எந்த தளர்வும் இருக்காது. மற்ற பகுதிகளில் இருக்க வாய்ப்புள்ளது. சென்னை, டெல்லி, மும்பை ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக வருகிறது. ஆகவே இந்த பகுதிகளில் ஊரடங்கு தளர்வு இல்லை. தமிழகத்தில் சென்னையிலும் இந்த ஊரடங்கு தளர்வு இல்லாத நிலையில் தொடரும்.







