--- --:--:-- --

சென்னை கோயம்பேடு சந்தையில் வலம் வரும் கொரோனா..! ஒரே நாளில் 9 பேருக்கு பாதிப்பு

Screenshot_2020-04-27-15-24-29-344_com.android.chrome

சென்னை கோயம்பேடு கடைகளில் பணியிலிருந்த 9 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

 

பூக்கடையில் வேலை செய்யும் 3 ஆண்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த மூவரையும் சேர்த்து பூக்கடைகளில் மட்டும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

பூக்கடையில் மட்டுமின்றி அண்ணா பழக்கடையில் ஆண்களுக்கும், பெரியார் பழக்கடையில் 3 ஆண்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. பொதுவாக, கோயம்பேடு மார்க்கெட்டில் வரும் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் சமூக விலகலை கடைபிடிப்பது இல்லை என்பது பொதுவான குற்றச்சாட்டாகும்.

 

இதன் பாதிப்பு 2 வாரங்கள் வாரங்கள் கழித்தே தெரியும் என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்து உள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டை 2 நாட்கள் மூடி, முழுக்க, முழுக்க கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon