மே 3 ம் தேதிக்கு பின்னர் விமானப் போக்குவரத்தைத் தொடங்க திட்டம்!
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் 30 சதவீத பயணிகளுடன் தொடர வாய்ப்புள்ளதாகவும், படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும், மெட்ரோ நகரங்களுக்கும் அதன் இணைப்பு நகரங்களுக்கும் சேவை தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில் ஒரு நுழைவு வாயில் மட்டுமே செயல்படும் என்றும், பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. மார்ச் 25ஆம் தேதி முதல் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மே 3 ஆம் தேதிக்குப் பிறகு தளர்த்தப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.







