ஊரடங்கில் கிரேப்ஸ் பீர் காய்ச்சியவர்கள் கைது!
ஊரடங்கில் கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய நிலையில் கேரட் பீரை அடுத்து திராட்சைப் பழத்தின் ஒயினை தயாரித்தவர்கள் போலீசாரிடம் சிக்கி உள்ளன. மது கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களுக்காக சமீபத்தில் சென்னை திருவொற்றியூரில் சுகுமார் என்பவர் வீட்டிலேயே கேரட் பீர் தயாரித்து வெளிப்படையாக விற்றார்.
அவரது வீட்டு வாசலில் கூடியிருந்த கூட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த, போலீசார் விசாரணையில் சுகுமார் சிக்கினார். சுகுமாரை போல இன்னொருவரும் சிக்கியுள்ளார். வீட்டிலேயே திராட்சை பழங்களை ஊறப்போட்டு திராட்சை ஒயின் தயாரித்தார்கள் இவர்கள். போலீசாரிடம் சிக்கியது எப்படி? தமிழகம் முழுவதும் ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
அதனால் மது கிடைக்காமல் மது பிரியர்கள் தவித்து வருகின்றனர். அவர்களின் தாகத்தைப் போக்க கள்ளச்சாராய வியாபாரிகள் மீண்டும் தலை எடுத்து தங்கள் விற்பனையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை பட்டாபிராமன் அடுத்த அன்னம்பெடு பகுதியில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அன்னம் பேட்டையை சேர்ந்த 26 வயதான ஜென்சிங், 36 வயதான பிரசாத், மற்றும் 36 வயதான செல்வகுமார் ஆகிய 3 பேரை பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வீட்டிலேயே திராட்சை பழங்களை மண்ணில் ஊறப்போட்டு திராட்சை ஒயின் தயாரிக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து பானை, அடுப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் திராட்சை ஊழலை கண்டுபிடித்து அழித்தனர். ஊரடங்கை பயன்படுத்தி மது பழக்கத்திலிருந்து விடுபடுங்கள் என மருத்துவர்கள் மருத்துவ ஆலோசகர்களை கூறிவரும் நிலையில் இது போன்ற சட்ட விரோத மதுபான தயாரிப்புகளும் அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. மது பிரியர்கள் எச்சரிக்கையாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய தருணம் இது.






