--- --:--:-- --

காவலர் போல் நடித்து பணம் பறித்த நபர் கைது!

7

மயிலாடுதுறையில் காவலர் போல் நடித்து வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்த நபரை காவல்துறையினர் அடித்து இழுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ரயில் நிலையம் அருகே உள்ள ரஞ்சித் என்ற இளைஞர் தன்னை காவலர் எனக்கூறி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்துள்ளார்.

 

இதுகுறித்து வானகரம் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி காவல்துறையிடம் புகார் அளித்தார். நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் போலீஸ் என வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டி வாகன ஓட்டிகளிடம் காவலர் போல் நடித்து பணம் பறித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த இளைஞரை காவல்துறையினர் அடித்து இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon