--- --:--:-- --

விவசாயிகளுக்கான சலுகைகள் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

9.2

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் விளை பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சினைகளை கலைந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். நவீன சேமிப்புக் கிடங்குகளில் விவசாயிகள், விளை பொருட்களை 180 நாட்கள் வரை வைத்து பாதுகாத்து அதிக விலை கிடைக்கும் காலங்களில் எடுத்து விற்பனை செய்யலாம்.

 

இந்த கிடங்கு வாடகை கட்டணத்தை முதல் 30 நாட்களுக்கு செலுத்தத் தேவையில்லை என அரசு ஏற்கனவே ஆணையிட்டு இருந்தது. அது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளைபொருட்களை அடமானத்தில் பெயரில் அதிகபட்சமாக 50 சதவீத சந்தை மதிப்பு அல்லது 3 லட்சம் ரூபாய் இவற்றில் எது குறைவோ அந்த அளவிற்குபொருளீட்டு கடனைப் பெறலாம்.

 

இந்த கடனுக்கான 5 சதவீத வட்டியை முதல் 30 நாட்களுக்கு செலுத்திட தேவையில்லை என ஆணையிடப்பட்டுள்ளது. அது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாத்திட கட்டணத் தொகை ஏப்ரல் 30 வரை வசூலிக்கப்பட மாட்டாது என்றும் இக்கட்டணத்தை முழுவதையும் தமிழ்நாடு அரசு ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த சலுகை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் செலுத்தும் ஒரு சதவீத சந்தை கட்டணம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த சலுகை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon