--- --:--:-- --

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பதவிக்கு ஆபத்தா?

5

கொரொனாவால் நாட்டிலேயே அதிக பாதிப்பை மகாராஷ்டிர மாநிலம் சந்தித்திருக்கும் நிலையில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த நவம்பர் 28ஆம் தேதி மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பதவியேற்றார். சட்ட மேலவைக்கு தேர்வாகி உத்தவ் முதல்வராக தேர்வாவார் என கணிக்கப்பட்டது.

 

ஆனால் கொரொனாவால் மேலவை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால் உத்தவின் திட்டம் நிறைவேறவில்லை. பதவியேற்று ஆறு மாதங்களுக்குள் அதாவது ஏப்ரல் 28 ஆம் நாளுக்குள் மேலவை அல்லது பேரவைக்கு தேர்வாக முடியாத நிலையில் உத்தவின் பதவி ஊசலாட்டத்தில் உள்ளது.

 

ஆளுநர் மூலம் நியமன உறுப்பினர் ஆக்கப்படுவது அல்லது பதவி விலகிவிட்டு மீண்டும் முதல்வராக பதவி ஏற்பது ஆகிய இரு வாய்ப்புகளில் ஒன்றை பின்பற்றி பதவியை தக்க வைப்பதிலும் சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கொரொனாவுக்கு எதிராக தீவிர போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில் முதல்வரின் பதவிக்கு நெருக்கடி எழுந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon