ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் ரூ.500க்கான மளிகை தொகுப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் 500 ரூபாய் மதிப்பிலான 19 மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் மளிகை பொருட்களை வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் நிர்மல்குமார் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ரேஷன் அட்டை இல்லாதவர்களும் ரேஷன் கடைகளுக்கு சென்று 500 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ரேஷன்கார்டு மற்ற எந்த ஒரு அடையாள விபரங்கள் எடுக்கப்பட மாட்டாது என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் சில துறைகளுக்கு தளர்வு அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. நிபுணர் குழு பரிந்துரைகளை ஏற்று தமிழகத்தில் 100 நாள் வேலை பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது . கிராம பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தில் நீர்ப்பாசன மற்றும் நீர் நிலை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளலாம்.

அணை பாதுகாப்பு, சாலை மேம்பால பணி களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அனுமதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல மின்சாரத் துறை தொடர்பான பணிகளும் அனுமதிக்கப்படுகின்றன.

 

இவை தவிர மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் கொரொனா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொருந்தாது. பொருளாதார பரவலை தடுக்க மூடப்பட்ட இடங்களில் கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply