--- --:--:-- --

ஆதரவற்ற மற்றும் வேலையில்லாத 200 க்கும் மேற்பட்டோருக்கு அரிசி,பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கிய கோவை காவல் துறையினர் !!!

1

உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தாக்குதல் காரணமாக வட மாநிலத்திவர்,ஆதரவற்றோர் மற்றும் வேலையில்லாத 200 க்கும் மேற்பட்டோருக்கு கோவை சிங்காநல்லூர் காவல் துறையினர் அரிசி,பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

 

கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் சிந்தாமணி மஹாலில் சிங்காநல்லூர் காவல் நிலையம் சார்பாக வட மாநிலத்திவர்,ஆதரவற்றோர் மற்றும் வேலையில்லாத 200 க்கும் மேற்பட்டோருக்கு
அரிசி, பருப்பு, காய்கறிகள், பால், பிஸ்கட்,மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. பொருட்களை சட்டம் – ஒழுங்கு துணை ஆணையர் சோமசுந்தரம் பொதுமக்களுக்கு கொடுத்து துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து சிங்காநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் முனீஸ்வரன்,உதவி ஆய்வாளர் அர்ஜுன் குமார், காசி பாண்டியன் உளவுப்பிரிவினை சேர்ந்த மாணிக்கம் மற்றும் சமூக ஆர்வலர் ஆடிட்டர் சசிகுமார், ஆத்மா அறக்கட்டளை சரவணன் கந்தவேல் ஆகியோர் கலந்துகொண்டு பொருட்களை வழங்கினர்.

Leave a Reply

Right Menu Icon