ஆண் குழந்தைக்கு லாக் டவுன் என பெயர்சூட்டிய தம்பதி!
திரிபுரா மாநிலத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு பெயர் லாக்டவுன் என பெயரிடப்பட்டுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த சஞ்சய் பவுரி, மஞ்சு பவுரி தம்பதி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நெகிழிப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களாக திரிபுராவில் உள்ளவர்களுக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. ஊரடங்கு சமயத்தில் பிறந்ததால் குழந்தைக்கு லாக்டவுன் என பெயர் சூட்டி விட்டனர்.
சென்னை பெருநகர மாநகராட்சியில் முதன்முறையாக அம்பத்தூர் நகரத்தில் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 116 பேருக்கு உறுதியாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 46 பேரும், திருவிக நகர் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களில் தலா 42 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆக உள்ளது. அண்ணா நகர் மண்டலத்தில் 27 திருவொற்றியூர் மண்டலத்தில், 12 வளசரவாக்கம் மண்டலங்களில், 9 பெருங்குடி மண்டலங்களில், 8 பேருக்கும் ஆலந்தூர், அடையாறு மண்டலங்களில் ஏழு பேருக்கும் இதுவரை கொரொனா உறுதியாகியுள்ளது.
மாதவரம் மண்டலத்தில் மூன்று பேருக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் இரண்டு பேருக்கும் புதிதாக அம்பத்தூர் மண்டலத்தில் ஒருவருக்கும் வைரஸ் தொற்று உள்ளது. மேலும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஒருவருக்கும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 388 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.







