--- --:--:-- --

மே மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்களுக்கு 24, 25 தேதிகளில் வீடு, வீடாக டோக்கன்..! தமிழக அரசு அறிவிப்பு!!

2

கொரோனா ஊரடங்கு நிவாரணமாக மே மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு, இம்மாதம் 24, 25 தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக கடந்த மார்ச் 24-ந் தேதி முதற்கட்டமாக 21 களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலானோர் வேலை இழந்து, வருவாய் இன்றி பாதிக்கப்பட்டனர்.

 

இதையடுத்து அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் ரூ i000 நிவாரணம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது தமிழக அரசு .அதன்படி ரூ .1000 ரொக்கம் வீடு, வீடாக சென்று வழங்கப்பட்டது. ரேசன் பொருட்கள் டோக்கன் முறையில் கடைகளில் வழங்கப்பட்டது.

 

இந்நிலையில், 2-ம் கட்டமாக, மே 3-ந்தேதி வரை ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு, மே மாதத்திற்கான ரேசன் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

 

மே மாதத்திற்கான ரேசன் பொருட்களை இலவசமாக வழங்கும் போது, ரேசன் கடைகளில் கூட்ட நெரிசலை தடுக்க முன் கூட்டியே டோக்கன் சிஸ்டத்தை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதன்படி இம்மாதம் 24, 25-ந் தேதிகளில் ரேசன் கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்குவார்கள் என்றும், அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரப்படி அடுத்த மாதத்திற்கான பொருட்களை ரேசன் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon