கொரோனாவுக்கு உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்வதில் எழுந்த சர்ச்சை..! அரசு டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு!!
சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை நல்லடக்கம் செய்ய விடாமல் ரகளை செய்ததைக் கண்டித்து, அரசு மருத்துவர்கள் அனைவரும் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் இரு நாட்களுக்கு முன், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்து பிரபல நரம்பியல் மருத்துவ நிபுணர் உயிரிழந்தார்.கீழ்ப்பாக்கம் பகுதியில் தனியார் மருத்துவமனை நடத்தி வந்த அந்த மருத்துவர் உயிரிழந்த சோகத்தை விட, அவருடைய உடலை அடக்கம் செய்யும் போது நடந்த சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் விவாதமாகியுள்ளது.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்திலும், அண்ணாரகர் அருகே வாலங்காடு மயானத்திலும் மருத்துவரின் உடலை அடக்கம் செய்த எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போர்வையில் சமூக விரோதிகள் நடத்திய வன்முறைச் சம்பவங்கள் பெரும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் 6க்களின் உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் உயிரிழக்கும் போது மனிதாபமற்ற முறையில் இழிவுபடுத்தும் இச்செயலுக்கு அனைத்து தரப்பினருமே கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே நெல்லூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும் சென்னையில் உயிரிழந்த போது, அவருடைய உடலை அடக்கம் செய்ய விடாமல் ஒரு கும்பல் ரகளை செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனா பணியில் உயிரை துச்சமென ஈடுட்டுள்ள மருத்துவர்களை அவமதிக்கும் இது போன்ற செயல்களை கண்டிக்கும் வகையில், நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் மருத்துவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யும்; எனவே அடையாள போராட்டத்தை கைவிடுங்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.







