ஏமாற்றிய ஹோட்டல் உரிமையாளர்! ஆத்திரம் அடைந்த வடமாநிலபெண்கள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிய ஹோட்டல் உரிமையாளர் காரை வழிமறித்து வட மாநில பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செயல்பட்டு வந்த தனியார் ஹோட்டலில் நேபாளத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வந்துள்ளனர். அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பெண்கள் கதறி அழுதபடி உரிமையாளரின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இன்று காலையில் காவல் நிலையத்திற்கு வரும்படி போலீசார் கூறியதை அடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






