--- --:--:-- --

கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையில் வெளியிடப்பட்ட எமலோகத்தில் ஆஃபர் குறும்படம் வெளியீடு! பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு !!!

20

உலகம் முழுவதும் பெரும் உயிர் பலிகளை உண்டாக்கி பீதியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க,நாடு முழுவதும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரக்கூடாது என்ற விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தை பொறுத்த வரை மக்கள் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்தினாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி சாலைகளில் மக்கள் சமூக பொறுப்பின்றி சுற்றித்திரிகின்றனர்.

 

இந்நிலையில் கோவை பசிஃபிக் மீடியா தயாரிப்பில் எமலோகத்தில் ஆஃபர் எனும் குறும்படத்தை பெரியநாயக்கன்பாளையம் வருவாய் ஆய்வாளர் நூர் முகம்மது கதை,திரைக்கதை,வசனம் எழுத சோபன் சேதுபதி இயக்கியுள்ளார்.சுமார் ஆறு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்தில் சித்திரகுப்தன் மற்றும் எமதர்மராஜா என இரு வேடங்களை கொண்டு விழித்திரு ! விலகி இரு !! வீட்டிலேயே இரு !!! எனும் கருத்தை மையமாக வைத்து குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் வெளியிட்டார்.தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர் பிருத்விராஜ் குறும்படத்தை யூ டியூப்பில் வெளியிட்டார்.இதில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் கோவிந்தராஜ் உடனிருந்தார்.நிகழ்ச்சியின் முடிவில் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ , காவல் துறையினர்,ஊர்க்காவல் படையினர்,பொதுமக்கள் தனித்திருப்போம்,விழித்திருப்போம்,வீட்டிலேயே இருப்போம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

 

இது குறித்து தயாரிப்பாளர் சடகோபால் பேசுகையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் நிலையில் நோய் தொற்று ஏற்பட்டு மரணங்கள் நிகழ வாய்ப்புள்ளது. அதனால் யாரும் வெளியே வராமல் காவல்துறை மற்றும் அரசின் அறிவுரையை மதித்து நடக்க வேண்டி விழிப்புணர்வு ஏற்படுவதற்காக இந்த எமலோகத்தில் ஆஃபர் Till 144 எனும் குறும்படத்தை உருவாக்கியதாக தெரிவித்தார்.

காவல் துறையினர் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், திருந்தாமல் வெளியே சுற்றும் பொதுமக்கள் இந்த குறும்படத்தை பார்த்தாவது திருந்துவார்களா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Right Menu Icon