இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆதியூர் ஊராட்சியில் கொரோனாவால் கிராமத்திற்குள் நுழையும் சாலை துண்டிப்பு
கடந்த சில தினங்களுக்கு முன்பு மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சந்தோஷ் என்ற வாலிபர் சொந்த ஊரான ஆதியூர் ஊராட்சிக்குட்பட்ட படப்பனேந்தல் கிராமத்திற்கு வந்துள்ளார். இதனையறிந்த கிராமத்தினர் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளனர்.
இதனை ஏற்றுக் கொண்ட வாலிபர் சந்தோஷ் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு சென்று நான் வெளி மாநிலத்தில் இருந்து சொந்த ஊர் வந்ததாகவும் ஆகவே எனக்கு தொற்று நோய் குறித்த அச்சம் இருப்பதாக கூறி பரிசோதனை செய்து கொள்ள வந்திருப்பதாக கூறியுள்ளார்.

அங்கு உள்ள மருத்துவர்கள் இங்கு அதற்கான வசதிகள் இல்லை என்று கூறியுள்ளனர். உடனடியாக ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளார் அந்த வாலிபர். உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறை ஒத்துழைப்போடு இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்
இதனால் ஆதியூர் கிராமத்திற்க்குள் வெளியூர் நபர்கள் நுழையாதவாறு முள்வேலி அமைத்து சாலையை துண்டித்துள்ளனர்.இந்நிலையில் இன்று மாலை ஊராட்சி மன்ற தலைவருக்கு அந்த வாலிபர் போன் செய்து மருத்துவ பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என்று என்னை வீட்டிற்கு செல்லுமாறு கூறியதாக கூறினார் ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர்.மேலும் இந்த தகவலை மருத்துவமனை மூலம் உறுதிபடுத்தி விட்டு அழைத்து வருவார்களா பொருத்திருந்து பார்க்கலாம்.







