--- --:--:-- --

10 மாவட்டங்களில் வாட்டி வதைக்கும் வெயில் !

12

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் 2 நாட்களுக்குள் 104 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. அதிகபட்சமாக நேற்று திருச்சியில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. தஞ்சாவூர், கரூர், மதுரை, சேலம், வேலூர் சிறையில் பாளையங்கோட்டை அருகே 100 டிகிரியும், கோவையில் 99 டிகிரியும், சென்னையில் 97 டிகிரியும் வெயில் வாட்டியது.

 

அதேசமயம் மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்தது. இந்த நிலையில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர், வேலூர், திருத்தணி ஆகிய மாவட்டங்களில் 104 டிகிரி அளவுக்கு வெயில் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon