தூத்துக்குடியில் கொரோனாவிலிருந்து குணமடைந்த 2 பேர் டிஸ்சார்ஜ்!
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரொனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் குணம் அடைந்ததால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட 25 பேரில் 5 பேர் நெல்லை அரசு மருத்துவமனையிலும், 20 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் காயல்பட்டினத்தை சேர்ந்த இருவருக்கு கொரொனா முழுமையாக குணமாகியது பரிசோதனையில் தெரிய வந்ததை அடுத்து அவர்கள் இருவருக்கும் பலத்த கரவொலி எழுப்பும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் மருத்துவ கல்லூரிகுழுவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
கொரொனாவை கண்டறிய உதவும் பிசிஆர் கருவிகளை வழங்கியதற்காக டாடா நிறுவனத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். நிறுவனம் சார்பில் தமிழகத்திற்கு வைரஸ் பற்றி கண்டறிய உதவும் 40 ஆயிரத்து 32 பிசிஆர் கருவிகளை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது.
8 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பரிசோதனை கருவிகள் வழங்கியதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் டாடா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.






