கொரோனா தடுப்பில் அடுத்து வரும் 3 வாரங்கள் முக்கியமானவை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இந்தியாவில் மொத்தம் உள்ள 736 மாவட்டங்களில் நான்கு மாவட்டங்களில் கொரொனா பாதிப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரொனாவை கட்டுப்படுத்த அனைத்து வகைகளிலும் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் கொரொனா வைரஸ் தொற்றை கையாளுவதில் அடுத்து வரும் மூன்று வாரங்கள் மிக முக்கியமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

உண்டியலில் சேர்த்து வைத்த 5 ஆயிரத்து 200 ரூபாயை ஆறாம் வகுப்பு மாணவன் நிதி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் நிதி வழங்கி வருகின்றனர்.

மேற்கு தாம்பரம் நகரிலுள்ள ஆறாம் வகுப்பு படித்து வரும் சல்மான் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்காக உண்டியலில் சேர்த்து வைத்து வந்துள்ளார் .இந்நிலையில்தான் உண்டியலில் சேர்த்து வைத்த பணம் 5,500 ரூபாயை நிவாரண தொகையாக வழங்கப்போவதாக சல்மான் பெற்றோரிடம் கூறியுள்ளான்.

 

இதையடுத்து சல்மான் தானே, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று பரங்கிமலை காவல்துறை ஆணையர், வருவாய் கோட்டாட்சியரிடம் உண்டியலில் சேர்த்து ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை ஒப்படைத்தார். அவர்கள் சிறுவனுக்கு நன்றி தெரிவித்தனர்.


Leave a Reply