--- --:--:-- --

சென்னை, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம்

5

சென்னையில் வெளியே செல்லும்போது முக கவசம் அணிந்து செல்வது கட்டாயம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மாஸ்க் அணியாமல் வெளியே செல்வோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று தடுப்பு விதிகளின் கீழ் முக கவசம் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேபோல கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தேவையான மருந்துகளை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மருந்துகள் வாங்க மருந்துக்கடைகளில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி மூன்றாயிரம் மருந்தகங்கள் ஒன்றிணைக்கப்பட்டு 1 8 0 0 1 2 12 1 7 2 என்ற இலவச எண் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டால் தொடர்பு கொண்டவரின் வீட்டிற்கு அருகில் உள்ள மருந்தகத்தில் இருந்து வருவார்கள். மருத்துவர்களின் குறிப்பை பெறும் அவர்கள் அதற்குரிய மருந்துகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்குவார்.

 

மருந்துகளை பெற மருத்துவர் குறிப்பு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையிலும் சில தினங்களுக்குள் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon