காய்கறி வாங்க சென்ற மூதாட்டிக்கு தொற்றி கொண்ட கொரொனா! பலியான அவலம்!
டெல்லியில் இருந்து கொரொனா தொற்றுடன் தூத்துக்குடிக்கு திரும்பியவரால் அடுத்தடுத்து ஏழு பேருக்கு கொரொனா நோய் தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் ரிட்டன்ஸ் சென்று வந்த கடைக்கு அத்தியாவசிய பொருளான காய்கறி வாங்க சென்ற தூத்துக்குடி கோல்டன் புரத்தை சேர்ந்த 72 வயது மூதாட்டிக்கு கொரொனா நோய் தொற்றிக் கொண்டது.
கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பலியான மூதாட்டியின் மகனும் லேப் டெக்னீசியன் ஆன மருமகளும் கொரொனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலியான மூதாட்டியின் சடலத்தை ஐந்தடுக்கு பிளாஸ்டிக் ஷீட்டால் சுற்றி ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்ற மாநகராட்சி ஊழியர்கள் 12 அடி ஆழத்திற்கு பொக்லைன் மூலம் குழிதோண்டி பாதுகாப்பாக அடக்கம் செய்தனர்.
இந்த காட்சிகள் கொரொனா கிருமி மிகக் கொடியது என்பதை தூத்துக்குடி மக்களுக்கு உணர்த்தியது. கொரொனா நோய் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் குறைந்தது 10 முதல் 14 நாட்கள் கழித்து தான் தெரிய வரும் என்பதால் நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் யார் என்பதை எல்லாம் எளிதில் அடையாளம் காண இயலாது.
அவர்கள் எங்குகைவைத்து சென்றார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது. இதுபோன்று ஒருவர் தொட்டு மற்றொருவருக்கு கொரொனா பரவி விடக்கூடாது என்பதற்காகத்தான் அந்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல கோடி மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்க சிலர் ஏதாவது ஒரு காரணத்தை கூறி அத்தியாவசியப் பொருட்களை வாங்க முன்னெச்சரிக்கை இல்லாமல் சென்று வந்த நிலையில் தூத்துக்குடியில் கொரொனாவிற்கு முதல் உயிர்பலி நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே மூதாட்டி வசித்து வந்த பகுதியை சுற்றியுள்ள ஏழு தெருக்கள் முற்றிலும் அடைக்கப்பட்டு விட்டது. அங்குள்ள 58 ஆயிரம் வீடுகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதை போல ஏவிய மருத்துவமனைக்கு கடந்த இரண்டு வாரங்களில் வந்து சென்ற 500க்கும் மேற்பட்டவர்களை வீட்டில் தனித்து இருக்க அறிவுறுத்தி தினமும் மூன்று வேளையும் செல்போனில் தொடர்பு கொண்டு சுகாதாரத்துறையினர் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
தற்போதைய சூழலில் தூத்துக்குடி மக்கள் வீட்டிலிருந்து எதற்காக வெளியில் சென்றாலும் கையுறைடன் செல்லுங்கள் முக கவசம் அணிந்து செல்லுங்கள் வெளியில் இருந்து திரும்பியவுடன் முகத்தையும் கையுறையையும் பத்திரமாக அகற்றிவிட்டு வீட்டிலுள்ள யாரையும் எந்த பொருளையும் தொடாமல் கைகளை சோப்பு போட்டோ அல்லது சானிடைசர் கொண்டோ நன்றாக கழுவிய பின்னர் வீட்டிற்குள் செல்வதுதான் பாதுகாப்பானது என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.







