--- --:--:-- --

85 வயது மூதாட்டி கொரொனா நிதி நெகிழ்ச்சி சம்பவம்!

12

தமக்கு கிடைத்த முதியோர் உதவி தொகையை அப்படியே கொரொனா நிதிக்கு வழங்க வந்த 85 வயது பாட்டியின் செயல் பல்லாயிரக்கணக்கானோரின் கண்களை திறக்கும் வண்ணம் நெகிழ்ச்சியாக இருந்தது. ஆட்கொல்லி கடுமையான கொரொனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் நிவாரண நிதி முதலமைச்சர் நிவாரண நிதி என பெரும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் புதுச்சேரி கோவிந்த சாலை பகுதியைச் சேர்ந்தவர் 85 வயதாகும் மூதாட்டி தையல்நாயகி. இந்த மாதம் தமக்கு கிடைத்த 3 ஆயிரம் ரூபாய் முதியோர் உதவி தொகையை அப்படியே கொரொனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வந்திருந்தார்.

 

புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்திற்கு வந்த போது பணத்தை காசோலையாக மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்றும் வங்கி விடுமுறை இருப்பதால் திங்கள்கிழமை காசோலையாக தரும்படியும் கூறியுள்ளனர். இதையடுத்து வரும் திங்கள்கிழமை காசோலையாக மாற்றிக் கொண்டு வருவேன் என மூதாட்டி தையல்நாயகி கூறி விட்டு வீடு திரும்பினார்.

 

கணவனை இழந்த தையல்நாயகி தமது ஒரே மகளுடன் புதுச்சேரியில் வசித்து வருகிறார். தொலைக்காட்சியில் பலர் நிதி வழங்குகிறார்கள் என்று செய்தியை பார்த்தவுடன் தமது சிறு உதவியையும் செய்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon