பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் உயிரிழப்பு!
சென்னை மயிலாப்பூரில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மைலாப்பூர் போக்குவரத்து பிரிவில் காவலராக இருந்த அருள் சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் நேற்று ஈடுபட்டிருந்தார். மதியம் 3 மணி அளவில் நெஞ்சுவலி ஏற்பட்டுஅருண் காந்தி மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்த காவலர்கள் உடனடியாக அதனை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
காவலரின் மறைவுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு பணிச்சுமை மன அழுத்தம் ஏற்படாத வண்ணம் காவல்துறை தலைவரும் தமிழக அரசும் அக்கறை காட்ட வேண்டுமென ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.






