கொரோனா தடுப்புக்காக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய எஸ்.பி. மயில்வாகனம்!
சுங்குவார்சத்திரம் பகுதியை சேர்ந்த நபருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் வசித்த பகுதி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய அவருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர் வசித்த பகுதிக்கு வெளிநபர்கள் போகாத அளவுக்கு தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன. குறிப்பாக திருவள்ளூர், பூந்தமல்லி, காஞ்சிபுரம், வாலாஜாபாத் செல்லும் சாலைகளில் தடுப்பு அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்துவரும் நிலையில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தனது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.







