--- --:--:-- --

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா?

4

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் தான் அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். உலகம் முழுவதும் தற்போது கொரொனா பரவி வரும் சூழலில் இந்தியாவில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கொரொனா கட்டுக்குள் வரப்படவில்லை. கொரொனாவினால் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரொனாவால் ஏற்படும் தொற்று அனைத்து மக்களுக்கும் பரவிவருகிறது. இதனால் கல்வி, பள்ளி மற்றும் கல்வி அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.

 

இந்த நிலையில்பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து முதலமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon